வீரியத்துடன் மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கும் நடிகர் விஷால்


நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் பல வெற்றிகளை குவித்த நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்றத்தை “விஷால் நற்பணி இயக்கமாக” 2015  ஆம் ஆண்டு மாற்றி மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியை எந்த ஒரு எதிர்ப்பர்பின்றி செய்தார் என்பது நாம் அறிந்தது தான். நற்பணி இயக்கமாக களம் கண்ட தன் அமைப்பை “விஷால் மக்கள் நல இயக்கமாக “ 2018 ஆம் ஆண்டு உருமாற்றி இன்னும் வீரியமாக மக்கள் நலப்பணியில் தன் ரசிகர்களோடு கரம் கோர்த்து மக்கள் நல பணியில் ஈடுப்பட்டார். 

இதனிடையே மற்ற நடிகர்களை போல் நேரடியாக சினிமாவிலிருந்து அரசியல் என்ற அணுகுமுறையை கையில் எடுக்காமல் தான் சார்ந்த சினிமா துறையில் நடந்த பல ஊழல்கள், பிரச்சனைகள் போன்றவற்றை கலைவது என முடிவெடுத்து துணிச்சலாக அத்துறை பிரச்சனைகளை கேள்விகளாக முன் வைத்து அதற்கு அன்று இருந்த நிர்வாகம் செவி சாய்க்காமல் இருந்த நிலையில் அந்த நிர்வாகத்தை எதிர்த்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் களம் கண்டு வெற்றியும் பெற்றார்.

மற்றவர்களை போல வெற்றிபெற்ற உடன் தாங்கள் அளித்த வாக்குறிதிகளை மறந்துவிட்டு செல்லும் பழக்கமில்லாத விஷால் ஒவ்வொன்றாக வாக்குறிதிகளை நிறைவேற்றி வந்தார், இறுதியாக நடிகர் சங்கம் கட்டிடமும் பிரம்மாண்டமாக எழும்பியது , பல அரசியல் குறிக்கீடுகள் இருந்த பின்பும் அதிவிரைவாக கட்டிடம் எழும்பிய பின் பல அரசியல் அழுத்தங்களை கொடுத்து நிர்வாகத்தை முடக்கி நடிகர்களின் கனவாக இருந்த கட்டிடத்தையும் தங்களின் சுயநலத்திற்காக சிலர் முடக்கினர்.
அதன் பின் தோல்வி பயத்தின் காரணமாக தேர்தல் நடந்து முடிந்த பின்னரும் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்தனர்.

இதனிடைய சினிமா உலகின் மிக முக்கியமான துறையான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற குளறுபடிகளை தடுத்த நிறுத்த கடந்த 2017 ஆம் ஆண்டு அச்சங்க தேர்தலிலும் களம் கண்டு அதிலும் வெற்றி பெற்று பல சாதனைகளை செய்தார்.

 குறிப்பாக இன்று பைரசி கட்டுபடுத்தப்பட விவகாரத்தில் விஷால் அவர்களின் முன்னெடுப்பு அபரிவிதமானது.

தயாரிப்பாளர் சங்கத்தில் எதிரணியில் போட்டியிட்டவர்கள்க்கூட விஷால் அவர்களின் மீது பொருளாதார ரீதியில் எந்த ஒரு குற்றச்சாட்டும் இன்று வரை வைக்கமுடியவில்லை என்பதே அவரின் நேர்மைக்கு எடுத்துக்காட்டு.

அதே போல் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மக்களுக்கு தொண்டாற்ற களமிறங்க தயாரானபோது மிகப்பெரிய அரசியல் அழுத்தங்களை நேரடியாகவே சந்திக்க நேர்ந்தது, அதனையெல்லம் பொருட்படுத்தாமல் அந்த இடைத்தேர்தலில் களம் காண மனுத்தாக்களும் செய்தார் , இங்கு அரசியல் ஆதாயங்களை அனுபவித்தவர்கள் விஷால் அவர்களின் வருகை தடுக்க பல வழிகளை கையாண்டு இறுதியாக பொய் காரணங்களை கூறி மனுவை நிராகரித்தனர்.
அதற்க்கு பலக்கட்ட சட்ட போராட்டங்களை விஷால் அவர்கள் சந்தித்தும் எந்த வித பலனளிக்கவில்லை என்பதால் இனி அரசியல் தேர்தல் களத்தில் உறுதியாக களமிறங்குவது என்ற முடிவை எடுத்து அதற்கு தற்போது உயிரளிப்பது போல், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவது என முடிவெடுத்துள்ளார். இம்முறை தான் மட்டும் அல்லாமல் தன்னை போன்றே மக்களுக்கு சேவையாற்றும் மக்கள் நலன் விரும்பும் நண்பர்கள், விஷால் மக்கள் நல இயக்க சகோதரர்கள் போன்றோருடன் இணைந்து இத்தேர்தலை சந்திப்பது என்ற முடிவையும் எடுத்துள்ளார்.

இனி விஷால் அவர்களின் அரசியல் வருகை தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments