கோயம்புத்தூர், 2022 ஜுலை 5: தென்னிந்திய மக்களால் பெரிதும் விரும்பப்படும் சிறப்பான ஆபரண பிராண்டான பிஎம்ஜே ஜுவல்ஸ், கோயம்புத்தூரின் ஆர்எஸ் புரத்தில் அதன் முதல் ஷோரூமை தொடங்கியிருக்கிறது. தென்னிந்தியாவில் பிஎம்ஜேயின் 24வது ஷோரூமாகவும் மற்றும் தமிழ்நாட்டில் முதலாவது ஷோரூமாகவும் திகழும் இது இந்த பிராண்டின் தீவிர விரிவாக்கத் திட்டத்தின் ஒரு அங்கமாக அமைகிறது.
இந்த ஆபரண ஷோரூமை பிரபல விவசாயி, தொழில்முனைவோர் மற்றும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைசெயலர் என பல பரிமாணங்கள் கொண்ட டாக்டர். ஆர். மகேந்திரன் திறந்து வைத்தார். பிஎம்ஜே நிறுவன அலுவலர்களும் மற்றும் அதனை நேசிக்கிற வாடிக்கையாளர்களும் இந்நிகழ்வில் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.
இம்மாநகரில் உள்ள வாடிக்கையாளர்களின் விருப்பங்களையும், ஆர்வங்களையும் கொண்டு எண்ணற்ற டிசைன்களில் உருவாக்கப்பட்ட திருமண ஆபரண கலெக்ஷனை இந்த ஸ்டோர் அறிமுகம் செய்திருக்கிறது. பிஎம்ஜே ஜுவல்ஸ் கோயம்புத்தூர், வைரம், தங்கம் மற்றும் பல்வேறு நவரத்தின கற்களில் கணக்கிலடங்காத வடிவமைப்புகளில் வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான நகைகளை வழங்குகிறது. இதற்குமுன்பு கண்டிராத டிசைனர் டைமண்ட் திருமண ஆபரண தொகுப்பு மட்டுமின்றி அனைத்து தருணங்களுக்கும் பொருத்தமான தினசரி அணியக்கூடிய நகைகளும் இந்த ஸ்டோரில் கிடைக்கின்றன. ஆபரணங்களை நேசிப்பவர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஜொலிக்கும் ஆபரணங்களின் அணிவகுப்பு இங்கு வருகைதரும் ஒவ்வொருவரையும் கவர்ந்திழுக்கும் என்பது நிச்சயம். இதன் ஆபரணத்தொகுப்பில் பாரம்பரிய, நவீன மற்றும் வெவ்வேறு பிராந்தியங்களுக்கே உரிய தனித்துவமான ஆபரண வடிவமைப்புகளில் எண்ணற்ற நகைகள் இடம்பெற்றுள்ளன. நவீன, மிக சமீபத்திய மற்றும் இதற்கு முன்பு கண்டிராத டிசைனர் ஆபரணங்கள் அணிபவர்களை மட்டுமின்றி, பார்ப்பவர்கள் அனைவரது மனங்களையும் மகிழ்ச்சியால் நிரப்பும் என்பதில் ஐயமில்லை.
இத்திறப்பு விழா நிகழ்வின்போது உரையாற்றிய டாக்டர். ஆர் மகேந்திரன், ‘‘எமது கோயம்புத்தூர் மாநகரில் பிஎம்ஜே ஷோரூம்-ன் முதல் ஷோரூமை திறந்து வைப்பது எனக்கு அளவற்ற ஆனந்தத்தை தந்திருக்கிறது. தங்களது புதிய ஷோரூமை தொடங்கி வைப்பதற்கான இந்த வாய்ப்பை வழங்கியதற்கான பிஎம்ஜே ஜுவல்ஸ்-ன் நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டுக்கு அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்; என்றும் நிலைக்கக்கூடிய ஒரு இனிய அனுபவத்தை தங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம் என்ற தங்களது வாக்குறுதியை பிஎம்ஜே ஜுவல்ஸ் இந்த ஷோரூம் மூலம் உறுதியாக செயல்படுத்தும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். இங்கு வைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு ஆபரணமும் மிக நுட்பமாக கலைநயத்துடன் அன்பையும், பேரார்வத்தையும் ஒருங்கிணைத்து வடிவமைக்கப்பட்டிருப்பது புலப்படுகிறது. இந்த பிராண்டின் மிகச்சிறப்பான கைவினைத்திறனுக்கு சாட்சியமாக இங்கு நான் பார்த்திருக்கிற ஆபரண வடிவமைப்புகள் இருக்கின்றன. கோயம்புத்தூர் மாநகரிலும் மற்றும் இதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுமுள்ள ஆபரண நேசர்களுக்கு, கண்டிப்பாக வருகைதந்து ஆபரணங்களை தாங்கள் விரும்பிய வடிவமைப்புகளில் வாங்கிச் செல்வதற்கான இடமாக பிஎம்ஜே ஜுவல்ஸ் கோயம்புத்தூர் நிச்சயம் இருக்கும்.’’ என்று கூறினார்.
பிஎம்ஜே ஜுவல்ஸ், காலத்தைக் கடந்து நிலைக்கக்கூடிய, அழகான வடிவமைப்புகளுக்கு மிகப் பிரபலமானதாகும். ஆபரணம் என்பது, வெறும் அணியக்கூடிய நகை மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கக்கூடிய ஒரு சொத்தாகவும், உணர்வாகவும் அது இருக்கிறது. அத்துடன், இனி வரவிருக்கும் தலைமுறைகளுக்கு அன்புடன் நாம் விட்டுச்செல்லும் பொக்கிஷமாகவும் ஆபரணங்கள் இருப்பதை யாரும் மறுக்க இயலாது. இங்குள்ள ஒவ்வொரு நகையும், திறனும் அனுபவமுமுள்ள நகை கைவினை கலைஞர்களால் கைப்பட உருவாக்கப்படுகிறது; அத்துடன், கைவினைத்திறன் மதிப்பு மற்றும் தனிச்சிறப்பான வடிவமைப்பு அம்சங்கள் ஆகியவற்றுக்கு பிஎம்ஜே-ன் உத்தரவாதத்துடன் ஒவ்வொரு நகையும் கிடைக்கிறது.
புதிய ஷோரூம் திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிஎம்ஜே ஜுவல்ஸ்-தமிழ்நாடு-ன் பிசினஸ் ஹெட் திரு. செந்தில் குமார் நடராஜன் கூறியதாவது, ‘‘கோயம்புத்தூரில் எமது முதல் ஷோரூமை திறந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதரவுக்கும் அன்புக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இங்குள்ள மக்கள் அனைவரும் கனிவும், மரியாதையும் நிறைந்தவராக இருக்கின்றனர். எமது பிராண்டின் மிகச்சிறந்த வடிவமைப்புகளில் இப்பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். வாழ்க்கையின் சிறப்பான தருணங்களுக்கான நேர்த்தியான ஆபரணங்களை வாங்கும்போது சரியானவற்றை முடிவை எடுக்க வேண்டுமென்று ஆலோசனையை பணிவன்போடு தெரிவிக்க விரும்புகிறோம். இந்த ஷோரூமில் வைக்கப்பட்டுள்ள எமது புதிய வடிவமைப்புகளை கோவையைச் சேர்ந்த மக்கள் நிச்சயமாக விரும்புவார்கள். புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த ஷோரூமுக்கு வருகை தரும் அனைத்து நபர்களும் ஒரு அற்புதமான அனுபவத்தை பெறுவார்கள் என்று எங்களால் வாக்குறுதி வழங்க முடியும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டிசைன்கள் அனைத்துமே மிக நேர்த்தியான தரத்தில் கட்டுப்படக்கூடிய மிதமான விலைகளில் கிடைக்கின்றன. ஒவ்வொரு வருகையாளரும் எமது சமீபத்திய மற்றும் அற்புதமான வடிவமைப்புகளின் அழகில் மயங்கி அவற்றை நேசிக்க தொடங்குவதை தவிர்க்க இயலாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.’’
அவர் மேலும் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் பிஎம்ஜே ஜுவல்ஸ்-ன் புதிய ஷோரூம்களை வெவ்வேறு நகரங்களில் மிக விரைவில் தொடங்குவதன் மூலம் எமது செயல்பாட்டை விரிவாக்கம் செய்ய நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பிஎம்ஜே ஜுவல்ஸ், கனிவான வரவேற்பு, இனிய விருந்தோம்பல் நிகரற்ற ஷாப்பிங் அனுபவம் ஆகியவற்றுக்காக மக்களின் பேராதரவை பெற்றிருக்கிறது. இந்த தனித்துவமான அனுபவத்தை நேரில் பெற்று மகிழ இம்மாநகரைச் சேர்ந்த அனைவரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்,’’ என்று குறிப்பிட்டார்.
பிஎம்ஜே ஜுவல்ஸ் குறித்து
தனித்துவமான மற்றும் அன்பை வெளிப்படுத்தும் அற்புத பரிசுகளான ஆபரணங்களை வாங்க விரும்புபவர்களுக்கு நிபுணத்துவ ஆலோசனையையும், தனிப்பட்ட சேவையையும் என்றும் நிலைக்கக்கூடிய தரத்தையும் வழங்குகிற நற்பெயரோடு மிக நேர்த்தியான ஆபரண பிராண்டாக பிஎம்ஜே ஜுவல்ஸ் தன்னை நிலைநாட்டி கொண்டிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறப்பான பாரம்பரியத்தை கொண்டிருக்கும் பிஎம்ஜே ஐதராபாத்தைச் சேர்ந்த ராஜ குடும்பத்தினருக்கும், பிரபல ஆளுமைகளுக்கும் பல தலைமுறைகளாக குடும்ப ஆபரண நிறுவனமாக இருந்து வருகிறது.
நிகரற்ற வடிவமைப்பில் மணப்பெண்ணுக்கான வைர ஆபரணங்களின் கலெக்க்ஷனுக்காக புகழ்பெற்றிருக்கும் பிஎம்ஜே, குடும்பத்தின் பாரம்பரிய நகைத்தொகுப்பின் ஒரு பகுதியாக இடம்பெறும் தனிச்சிறப்பான, மிக நேர்த்தியான ஆபரணங்களை வடிவமைத்து வழங்கும் நிறுவனமாக இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் பேரன்பை பெற்றிருக்கிறது. தென்னிந்தியாவெங்கிலும் தற்போது 20+ ஷோரூம்களை கொண்டிருக்கும் பிஎம்ஜே-ன் பிரதான ஷோரூம், ‘தி ஹவுஸ் ஆஃப் பிஎம்ஜே’ என்ற பெயரில் சாலை எண். 10, ஜுப்ளி ஹில்ஸ், ஐதராபாத் என்ற முகவரியில் அமைந்திருக்கிறது.
ஊடக விசாரணைக்கு :
ஹரி பிரசாத் /சார்லஸ்
பிஆர் கன்சல்டன்ட்ஸ்
கோவை மாநகரில் பிஎம்ஜே ஜுவல்ஸ்-ன்முதல் ஷோரூம் : கோலாகல ஆரம்பம்
Reviewed by firstshowz
on
5:41 pm
Rating: 5
No comments