நன்றி... நன்றிகள்.. அண்ணா...


தந்தையை இழந்த தாயின் அரவணைப்பில் வாழும் ஒரு ஏழை எளிய பெண் விவசாயி சித்ரா அவர்களின் மகள் ஜீவிதா அவர்கள் திருச்சி திருவானைக்கோவில் உள்ள ஸ்ரீமத் ஆண்டவர் கலை & அறிவியல் கல்லூரியில் Micro Biology இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி-க்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலே நிறுத்தும் அவலநிலையில் இருந்தபோது, *நடிகரும், மக்கள் நல இயக்கம் தலைவரும், தேவி அறக்கட்டளையின் தலைவரும், சமூக நீதியாளரும் மாண்புமிகு. 


அண்ணன் விஷால் அவர்களை திருச்சி சமயபுரம் அருகில் நடைபெற்ற படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து படிப்பு உதவித்தொகை கேட்டபொழுது, சிறிதும் யோசிக்காமல் மறுகணமே உன்னை நான் IAS வரை படிக்க வைக்கிறேன் நீ நன்றாக படி நான் உன் அண்ணனாக இருந்து உன் இலட்சியத்தை நிறைவேற்றுவேன் என்று அன்புடன் அரவணைத்து உறுதி கூறினார். அதற்கு பின்னர் வந்த முதலாம் ஆண்டு வந்த இரண்டாம் பருவ கல்லூரி கட்டணத்தை செலுத்தியும், இந்த வருடம் இரண்டாம் ஆண்டு மூன்றாம் பருவ கல்லூரி கட்டணத்தையும் முழுமையாக செலுத்தி அந்த ஏழை விவசாயி வீட்டு பிள்ளையின் வாழ்வாதாரத்தை காப்பாற்றி உள்ளார். *எங்கள் அண்ணன் மாண்புமிகு. விஷால் அவர்களுக்கும், அதற்கு முழு முதழ்கடவுளாக இருந்த தேவி அறக்கட்டளையின் நிர்வாகி, அகில இந்திய விஷால் நற்பணி மன்றத்தின் தலைவர், மக்கள் நல இயக்கம் செயலாளரும் எங்கள் அண்ணன் உயர்திரு. ஹரிகிருஷ்ணன்* அவர்களுக்கும், மற்றும் தேவி அறக்கட்டளை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ரிச்சர்ட் அவர்களுக்கும் எங்களின் கோடான கோடி நன்றிகளை பணிந்து தெரிவித்துகொள்கிறோம்... நன்றி.. நன்றி.. நன்றி...

🙏🙏🙏🙏🙏
  இப்படிக்கு
S . ஜீவிதா - மாணவி
Micro Biology இரண்டாம் ஆண்டு.
S. சித்ரா - மாணவியின் தாய்
பெண் விவசாயி.

No comments