நடிகர் விஷால் அவர்களின் அறக்கட்டளை மூலம் படிக்க வைக்கும் 2024ஆம் ஆண்டு கல்லூரியில் மாணவ, மாணவியர்கள்


நடிகர் விஷால் தனது அம்மா அவர்களின் பெயரில் 'தேவி அறக்கட்டளை' மூலம் பலவருடங்களாக ஏழை எளியோர்க்கு உதவி செய்வதுடன், வருடம் தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மேற்க்கொண்டு படிக்க முடியாத மாணவர்கள் குறிப்பாக பெண் பிள்ளைகளை கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில்.

படிக்கவைத்து வருகிறார். அதே போன்று இந்த வருடம் 2024ஆம் ஆண்டு கல்லூரி படிப்பிற்கான சேர்க்கையில் விவசாய குடும்பங்கள், முதல்நிலை பட்டதாரிகள் மற்றும் தாய் தந்தை இல்லாத வறுமை கோட்டிற் கீழ் உள்ள ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பதிவும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்று அதில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிப்பிற்கு உதவி செய்துள்ளார். 





No comments